பொதுமக்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் பொடாரம் பாளையம் ஏடி காலணியில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார கட்டிட வளாகம் திறக்கப்படாமல் உள்ளது.
அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவரக் கோரியும்,
இரண்டாவது வார்டில் டீம் கார்டன் பகுதியில் இருந்து வெளியே வரும் கழிவு நீர் சர்வீஸ் ரோட்டில் தேங்கி நிற்பதால்,அவ்வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.
கழிவுநீர் செல்வதால் அதனை தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும்,
ஏழாவது வார்டு பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குப்பை அள்ளுவதற்கு பணியாளர்கள் வராததனால் மலை போல் குப்பை தேங்கி உள்ளது தினமும் குப்பை அல்ல வேண்டும் என்று கோரிக்கையும்,
மேலும் இதுபோன்று 13 கோரிக்கைகளை வலியுறுத்தி.
மக்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள். பொறுப்பாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
