பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் இருந்த
7000 ரூபாய் பணத்தை எடுத்து வந்தவாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் கல்லூரி மாணவர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு சென்ற பெரிய காலனி பகுதியைச் சேர்ந்த மாணவர் ஏடிஎம் இயந்திரத்தில் வெளிவந்த நிலையில் இருந்த 7000 ரூபாய் பணத்தை இளைஞர் எடுத்து வந்தவாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
வந்தவாசி பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்.
இவர் செய்யார் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மகேஷ் வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில்
பணம் எடுப்பதற்காக உள்ளே சென்றுள்ளார்.
அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 7000 ரூபாய் வெளியே வந்த நிலையில் இருந்ததை பார்த்த மகேஷ் யாரோ பணம் எடுப்பதற்கு சென்றபோது பணம் வெளியே வருவதற்குள் சென்று விட்டனர் என தெரிந்து கொண்டார்.
இதையடுத்து மகேஷ் 7000 ரூபாயை எடுத்துக் கொண்டு வந்தவாசி தெற்கு காவல் நிலையத்திற்கு சென்று வந்தவாசி
காவல் ஆய்வாளர் விஸ்வநாதனிடம் ஒப்படைத்தார்.
ஏடிஎம் இயந்திரத்தில் 7000 ரூபாய் பணம் வெளிவந்த நிலையில் இருந்த பணத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெரிய காலனி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆவார். வளரும் தலைமுறைக்கு மகேஷே சிறந்த முன் உதாரணம் என காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் மகேஷூக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார்.
