தைத்திருநாளை முன்னிட்டு உழவர் திருநாள் அன்று திருப்பூர் மாநகராட்சி மற்றும் நிட்மா நொய்யல் ஜீவநதி சங்கமம் இணைந்து நடத்திய பொங்கல் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ் அவர்கள் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிறிஸ்தவராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உயர்திரு.அகில் ரத்தினசாமி அவர்கள் தலைமை தாங்க பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும்,நிகழ்ச்சியில் அதிகாலை ஏழு மணி அளவில் 1008 சமத்துவ பொங்கலிட்டு ஆரம்பிக்கப்பட்டு இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆணையர் திரு. பவன் கல்யாண் மற்றும் மாநகராட்சி மேயர் திரு.தினேஷ் குமார் அவர்கள் திருப்பூர் தெற்கு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கா. செல்வராஜ் அவர்கள்
திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே. சுப்புராயன் அவர்களும் மேலும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சியை தமிழ்நாட்டின் முதன்மையான மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் எனவும்,தூய்மையான மாநகராட்சியாக அமைத்திட வேண்டும் எனவும் கூறினார்.


