திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலைபூலுவபட்டியில் இருந்து பூண்டி செல்லும் வழியில் மூன்றாவது வார்டில் பெரியார் காலனி பகுதி குடியிருப்பில் கழிவுநீர் செல்லும் பாதை அடைப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலை வழியாக தினம்தோறும் கழிவுநீர் சென்று கொண்டிருக்கின்றது.
துர்நாற்றத்துடன் கூடிய கழிவுநீர் சாலையை ஆக்கிரமித்து செல்வதால் பெரும் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் பெரிதும் வேதனை அடைகின்றார்கள்.
நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை எங்கிலும் கழிவு நீர் செல்வதால்
மூன்றாவது வார்டு கவுன்சிலரிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்மீடியா நெட்ஒர்க் செய்தியாளர்.
