வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் தெய்வீக அருள் ஆசியோடு, ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் குழந்தை மருத்துவத் துறையால் மனித பாப்பிலோமா வைரஸ் என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியை இயக்குநர் பேராசிரியர் என். பாலாஜி தொடங்கி வைத்தார். மனித பாப்பிலோமா வைரஸ் தொடர்பான நோயை தடுப்பது, பரிசோதனை செய்வது மற்றும் சிகிச்சை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. குழந்தை மருத்துவம், பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, புற்றுநோயியல், மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவம், தோல் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் போன்ற பல்வேறு துறைகளின் நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களுடன் மருத்துவர் கீதாஇனியன் மற்றும் மருத்துவர் தமிழரசி, மருத்துவர் சக்திவேலன், மருத்துவர் நிஷா ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
