பசுவந்தனை அருகே உள்ள கிராமப்புற மாணவர் உலக அளவில் நடைபெறும் வில்வித்தை போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அந்த மாணவருக்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பசுவந்தனை அருகே உள்ள கீழமங்களம் ஊராட்சி, குப்பனாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்லத்துரை என்பவரது மகன் சுகாஸ்.
தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவன் சுகாஸ் கடந்த மாதம் 6ம் தேதி ஜெய்ப்பூரில் தேசிய அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் முதலிடம் பிடித்து ஜனவரி 29ம் தேதி நேபாளத்தில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
இதையறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மாணவனை நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார்
