வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன்,ஐஏஎஸ் தலைமையில் நடந்தது.
இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
