தருமபுரி மாவட்டத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி விழா!!!

sen reporter
0


 தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் தீவிர வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வாக்காளர் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.



மேலும், இந்நிகழ்வில் வாக்களிப்பதின் அவசியம் மற்றும் வாக்களிப்பு இயந்திரம் பயன்படுத்தவேண்டிய முறைகள் குறித்து துணை வட்டார அலுவலர் ரமணி பேசினார்.விழாவின் தொடக்கத்தில்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர் கார்த்திகேயன் வரவேற்றார்.



இந்நிகழ்ச்சியில் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜா, அனைத்து இந்திய கலாம் கனவு அறக்கட்டளை நிறுவனர் சென்னையன் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



100 ற்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்  பாரதிதாசன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top