சென்னை: வருவாய் நிர்வாக ஆணையரகத்தில் வாழ்வாதார கோரிக்கைகளுக்கு வேலை நிறுத்தப் போராட்டம்! ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 வது நாளாக தொர்கிறது!!

sen reporter
0

 சென்னை வருவாய் நிருவாக ஆணையரகத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 38 மாவட்டங்களிலும் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழிகள் கலந்து கொண்டு "தொடர் காத்திருப்பு போராட்டம்" நடைபெற்று வருகிறது.

ஒன்பது அம்ச கோரிக்கைகள்:

இளநிலை வருவாய் ஆய்வாளர் / முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதிதிருத்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும்.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்கிட வேண்டும்.


இளநிலை உதவியாளர் / தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக உரிய தெளிவுரை வழங்கிட வேண்டும்.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும்.


அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும்.


அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும்.



வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து அவற்றிற்கு ஈடாக புதிய ஈப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும்.


2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்கிட வேண்டும்.


உங்கள் ஊரில் உங்களைத் தேடி, மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்றஅரசின் திட்டப்பணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதைத் தவிர்த்து திட்டப் பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்டவை.


மாநில மையத்தின் மேலான அறிவுறுத்தலின் படி வருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான 09 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளுக்கான 38 மாவட்டங்களிலும் அனைத்து விதமான பணிகளையும் தேர்தல் கூட்டங்கள் உட்பட புறக்கணிப்பு செய்து அதிக எண்ணிலான அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top