சென்னை: தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!?
3/01/2024
0
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளான இன்று தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று காலை தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் வந்த மிரட்டல் அழைப்பால் தலைமைச் செயலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அது போலியான மிரட்டல் என்பதும், கடலூர் நெல்லி குப்பத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரகாஷ் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் தான் மிரட்டல் விடுத்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
