வேலூர் மாவட்டம், குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றத்தின் 27-ஆம் ஆண்டு இன்பத் தமிழ் திருவிழாவில் மக்கள் சேவகர் ஏ.சி.சண்முகம் பேசியதைக் கேட்ட பார்வையாளர்கள் நெகிழ்ந்தனர்.
திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மக்கள் சேவகர் ஏ.சி.சண்முகம் பங்கேற்று குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்ற விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி என்றும் குருநாதர் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் ஆண்டுதோறும் விழாவில் பங்கேற்கிறார் எனவும் கூறினார்.
மேலும்,பதுமனாரின் தமிழ்த் தொண்டு பாராட்டுக்குரியது என்றும் தமிழ் அறிஞர்களுக்கு உதவிடவும், தமிழ்த் தொண்டுக்காகவும் இனி முத்தமிழ்ச் சுவைச் சுற்றத்துக்கு இனி ஆண்டுதோறும் ரூ.2 லட்சத்தை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைகழகம் சார்பில் வழங்குவேனன் எனவும் கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் எனக்கு ராஜராஜேஸ்வரி என்ற மருத்துவக் கல்லூரிகள் உள்ளன ஐந்து மாவட்டங்களில் சிறந்த மருத்துவ சேவையாற்றுகிறது என்றும் தொடர்ந்து,நாள்தோறும் 30 ஆபரேஷன்கள் நடக்கின்றன. 1,800 படுக்கை வசதி கொண்டது. 180 ஐசியூ பெட்டுகள் உள்ளன. ரூ.5 லட்சம் வாங்கப்படும் இதய ஆபரேஷன் ரூ.20ஆயிரத்துக்கு செய்யப்படுகிறது என பேசினார்.
இதன் தொடர்ச்சியாக சிக்கலான ஆபரேஷன்கள் கூட ரூ.10 ஆயிரம்தான்,1 லட்சம் ஏழைகளுக்கு ராஜராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இலவச ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளன.
இதனால் டாக்டர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'எப்.ஆர்.சி.எஸ்.' பட்டம் எனக்கு வழங்கப்பட்டது. இந்த பட்டம் பெற்ற மற்றொரு இந்தியர் டாக்டர் அப்துல் கலாம். எங்கள் மருத்துவமனைக்கு அப்துல் கலாமை அழைத்தபோது, அரைமணி நேரம்தான் பேசுவதற்கு ஒதுக்கீனார்.ஆனால், 2 மணி நேரம் சுற்றி பார்த்துவிட்டு 'வெரி ஒன்டர்புஃல் ஹாஸ்பிட்டல் ' என வியந்து பாராட்டியதையும் கூறினார்.
வெளிநாட்டு தலைவர்கள் பலர் ராஜராஜேஸ்வரி மருத்துவமனையை பாராட்டியுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு நிகராக உள்ள இதுபோன்ற மருத்துவமனையை வேலூரில் அமைப்பேன். 1984-இல் வேலூர் எம்.பி.யானேன். இருமுறை போட்டியிட்டும் தோற்றேன். மேலும்,விட்டதை பிடிக்க விட்ட இடத்தில் தேட வந்துள்ளேன்.
எனது சொந்த ஊர் ஆரணியே எம்.பி. தொகுதியாகி விட்டாலும் வேலூர் முன்னாள் எம்.பி. என்ற அறிமுகம்தான் பரவலாக இருக்கிறது. அதனால்தான் வேலூரை விரும்புகிறேன். இருக்கும் வரை சேவை செய்வேன். இறந்த பின்னர் வாட்ச் கூட நம் கூடவராது. புண்ணிய கணக்குதான் கடைசிவரை வரும் என்று மக்கள் கூட்டத்தில் பேசினார்.
வேலூர் முன்னாள் எம்.பி. அடையாள அட்டைதான் எனது பாக்கெட்டில் எப்போதும் உள்ளது. இருக்கும்வரை உதவிகள் செய்வோம் என்று மக்கள் சேவகர் ஏ.சி.சண்முகம் வாழ்த்தி பேசினார்.
பின்னர் குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்ற நிறுவனர் வே.பதுமனார் பேசுகையில், "வெற்றி மீது வெற்றி வந்து ஏ.சி.சண்முகத்தை சேரும்" என்று பதுமனார் வாழ்த்தினார். வக்கீல் கே.எம்.பூபதி, பேராசிரியர் அன்பு, புதிய நீதிக் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.கோட்டீஸ்வரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.ராஜ்குமார், குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் பாரத் மகேந்திரன், நகர செயலாளர் எஸ்.ரமேஷ் மற்றும் பலர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு ஏ.சி.சண்முகம் சார்பில், வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. குடியாத்தம் தி.பிரவீன்குமார், தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவர் ஏ.சிஎஸ்.வருகைக்கு உண்டான ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
