சென்னை மாவட்டம் நீலாங்கரை காவல்துறையினருக்கு கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு தலைமையிலான காவல்துறையினர் ராஜா நகரில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
பரிசோதனை நடைபெற்றதின் தொடர்ச்சியாக வெட்டுவாங்கேணியை சேர்ந்த சையது என்ற 30 வயதுள்ள நபரும், அதே பகுதியே சேர்ந்த கணேஷ்குமார் என்ற 22வயதுடைய நபரும், மேலும்,கானத்தூர் நகரை சேர்ந்த 29வயதுடைய நபரும், கஞ்சா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சா கடத்திய மூன்று பேரையும்,2கிலோ கஞ்சாவையும் கைப்பற்றிய காவல் துறையினர் வழக்குபதிவுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
