பேரணாம்பட்டில் கறி வெட்டி பிரச்சாரம் மேற்கொண்ட திரைப்பட நடிகர் மன்சூர் அலிகன்

sen reporter
0


 

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக கடந்த சில நாட்களாக வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடிகர் மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு பகுதியில் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த ஒரு கறிக்கடையில் கறி வெட்டி கறிக்கடை உரிமையாளர்கள் மற்றும் அங்கிருந்த இளைஞர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் மன்சூர் அலிகான். மேலும் அகிம்சைவாதியான என்னை இம்சைவாதியா ஆக்குறீங்களேப்பா என கலகலப்பாக பேசிக்கொண்டு சிக்கனை இரண்டு துண்டுகளாக வெட்டி ஏக் மார் தோ துக்கடா என்றார். இதை கேட்டு அனைவரும் சிரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top