பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தபால் வாக்கு செலுத்தும் வகையில் படிவம் 12 D வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தபால் வாக்குச் செலுத்தும் வகையில் படிவம் 12 D வழங்கும் பணியை வேலூர் சலவன்பேட்டை திருப்பூர் குமரன் தெருவில் உள்ள வாக்காளர்களிடம் 12 ID படிவத்தை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ல் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் தபால் வாக்குகளை செலுத்த இந்திய தேர்தல் ஆணையத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 2715, வேலூர் சட்டமன்ற தொகுதியில் 1574, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 2617 கீழ் வைத்தியானங்குப்பம் சட்டமன்ற தொகுதியில் 2859. குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 2664 என
மொத்தம் 12429 வாக்காளர்கள் உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 1572, வேலூர் சட்டமன்ற தொகுதியில் 1094 அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 2373, கீழ் வைத்தியானங்குப்பம் சட்டமன்ற தொகுதியில் 2491 குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 2508 என மொத்தம் 10,038 வாக்காளர்கள் உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட 12429 வாக்காளர்கள், 10,038 மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு விருப்பத்தின் பேரில் தபால் வாக்கு செலுத்தும் வகையில் படிவம் 12 D வழங்கும் பணி முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 12 D படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலோ. வேலூர் மக்களவை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலோ 25.032024 க்குள் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலரிடம் உரிய ஒப்பம் செய்து சமர்ப்பிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இராக கவிதா, வேலூர் வட்டாட்சியர் கோபி ஆகியோர் உடன் இருந்தனர்.
