வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கு
3/19/2024
0
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு வேலூர் மக்களவைத் தொகுதியில் பணிபுரிய உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அ.செல்வராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முருகன் (அணைக்கட்டு), சுமதி (கீ. வ.குப்பம்), கவிதா (வேலூர்), செல்வி சுபலட்சுமி (குடியாத்தம்) டி. அஜிதா பேகம் (வாணியம்பாடி), ஃபெலிக்ஸ் ராஜா (ஆம்பூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
