வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி தேர்தல் கட்டுப்பாட்டு அறையை திறந்து
வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அ.செல்வராஜ், வட்டாட்சியர் (தேர்தல்) சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
