காட்பாடி அடுத்த பெரியபுதூர் கிராமத்தில் ஸ்ரீ கெங்கைஅம்மன் திருவிழா வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பெரியபுதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் கோயில் திருவிழா கடந்த 18ஆம் தேதி இரவு 9 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து 25ஆம் தேதி இரவு 7 மணி முதல் 10 மணி வரை வாய்ஸ் ஆஃப் குக்கூ குழுவினரின் பாட்டுக் கச்சேரி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து அம்மனுக்கு காப்பு கட்டுதல், அம்மனுக்கு அபிஷேகம், இரவு திருவிழா மற்றும் பகல் திருவிழா அம்மன் பிரபை ஜோடிப்பு, அலங்காரம், ரேடியோ செட், மின்னலங்காரம், இசை கச்சேரி, தாரை, தப்பட்டை, நாதஸ்வரம், மேளம், கொக்கலிக்கட்டை, புலி வேஷம், மோடி வேஷம், வாண வேடிக்கை, அன்னதானம், கோவில் வர்ணம் மற்றும் நிகழ்ச்சி நிரல் என்று அனைத்து திருவிழாவுக்கான மொத்த செலவையும் உபயதாரர் விந்தா ரெட்டி என்கிற என். பாலன் ரெட்டி சி. நவநீதம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மற்றும் சத்திய பிரபா புருஷோத்தமன் ரெட்டி குடும்பத்தினர் மற்றும் சுபாஷினி மணிவண்ணன் ரெட்டி குடும்பத்தினர், வைஷ்ணவி சஞ்சீவிகுமார் ரெட்டி குடும்பத்தினர் மற்றும் சியாமளா தனபால் ரெட்டி குடும்பத்தினர், அசோகன் ஸ்ரீதேவி ஆகியோர் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து திருவிழாவை முன்னிட்டு 26 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இதை தொடர்ந்து திருவிழாவை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கொக்கலிக்கட்டை, மோடி புலி ஆட்டம் மற்றும் வாணவேடிக்கை விமரிசையாக நடைபெற்றது.
இந்த கெங்கை அம்மன் கோயில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பெரியபுதூர் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் வெகு விமரிசையாக செய்திருந்தனர்.