திருப்பூர் மாவட்டம்2023/2024 ஆம் கல்வி ஆண்டு தேர்வு நடந்து முடிந்த நிலையில்
பள்ளிகளுக்கு விடுமுறை முடிந்து மீண்டும் வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்க படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பள்ளிகள் பூட்டி இருந்த நிலையில் பள்ளிகளுக்குள் குப்பைகளும் நூலாம்படைகளும் படர்ந்து இருப்பதாலும்
அதோடு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து பள்ளி வளாகத்துக்குள் மழைநீர் தேங்கி செடி கொடிகளும் வளர்ந்து புதல் போல் உள்ளதால்
பள்ளி திறப்பதற்கு முன்பாக அதனை சுத்தம் செய்து மாணவ மாணவியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட கோரி காமராசர் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது