தென்காசி மாவட்டம் கருவந்தாவில் கூடுதலாக ஒரு அங்கன்வாடி அமைத்திட வேண்டும் என அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், கருவந்தா கிராமத்தில் ஏற்கனவே ஒரு அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அங்கன்வாடி பணியாளர்களால் குழந்தைகளை பராமரிப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே கருவந்தா கிராமம் 3வது வார்டு பகுதியில் கூடுதலாக ஒரு அங்கன்வாடி அல்லது மினி அங்கன்வாடி அமைத்திட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பால்துரை கோரிக்கை விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கருவந்தாவில் கூடுதல் அங்கன்வாடி அமைத்திட நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கீதாஜீவன், இது சம்பந்தமாக மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரின் பேசி, கூடுதல் அங்கன்வாடி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிதார்.