படிக்காத பாமரர்கள்தானே எனும் ரீதியில் பொதுமக்களை புலம்பவிடும் தேனி மாவட்ட உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகம்!!!
May 27, 2024
0
படிக்காத பாமரர்கள்தானே எனும் ரீதியில் பொதுமக்களை புலம்பவிடும் தேனி மாவட்ட உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குடிநீர் வரி கட்டணம் செலுத்தும் ரசீதில் நிர்வாகத்தினரின் அலட்சியப்போக்கினாலும், பேரூராட்சியின் இஷ்டத்திற்கு ஏற்ப பெயர்களை மாற்றி ரசீது கொடுப்பதாகவும் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.பல வருடங்களாக உத்தமபாளையம் பேரூராட்சியில் குடிநீர் வரி கட்டணம் செலுத்தி வரும் பொதுமக்கள் தற்போது இரண்டு மாத காலங்களாக குடிநீர் வரி ரசீதில் வேறொரு பெயர் இருப்பதை கண்டு பதறிப்போக மேலும்,இதுகுறித்து உத்தமபாளையம் பேரூராட்சியில் வரிவசூல் செய்யும் இடத்தில் சென்று கேட்டாலும், பொதுமக்களை படிக்காத பாமரர்கள்என்ற நோக்கில் உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர் சக்கை சக்கையாக பிழிந்து எடுப்பதாக மக்கள் கண்ணீர்.ஆண்களின் பெயரில் குடிநீர் கட்டணம் கட்டினால் வரி செலுத்தும் உரிமையாளரின் வீட்டிற்கே சம்பந்தம் இல்லாத பெண்கள் பெயரில் ரசீது எடுத்து தருவதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். உத்தமபாளையம் பேரூராட்சியின் இந்த அவல நிலையால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக தகவல் தெரிகிறது. பேரூராட்சியில் இதற்கு முன்னாள் இருந்த அதிகாரிகளால் இப்படி தவறுகள் நடந்ததே இல்லை என்றும், இப்போது இருக்கும் அதிகாரிகள் யாரும் சரியாக செயல்படவில்லையா என்றும் பொதுமக்கள் பரவலாக பேசி வருகின்றனர். பேரூராட்சியின் இந்த செயலானது தமிழக அரசிற்கும் தமிழக முதல்வருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் என தெரியாதா மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதுகுறித்து உத்தமபாளையம் பேரூராட்சியின் செயல் அலுவலர் நடவடிக்கை எடுப்பரா? வழக்கம் போல் கண்டும், காணாமலும், செயல்படுவாரா பொறுத்திருந்து பார்ப்போம்..