தூத்துக்குடி மாவட்டம் : சூரங்குடி: பசுவை மீட்ட இளைஞர்கள்! பொதுமக்கள் பாராட்டு!!
May 22, 2024
0
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பகுதியில் வயல்வெளியில் தேங்கியிருந்த மழை நீரில் தண்ணீர் குடிக்க சென்ற பசுமாடு ஒன்று சேற்றில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், சேற்றில் இறங்கி பசு மாட்டினை பெரும் சிரமத்திற்கு இடையில் போராடி பத்திரமாக மீட்டனர். பசுவை மீட்ட இளைஞர்களுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.