அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டன்குடிசையைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் இந்திய ராணுவத்தில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி திடீரென மாரடைப்பல் உயிரிழந்தார். இதையடுத்து இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ராஜேஷின் உடலுக்கு சென்னையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து தேசிய கொடியை போர்த்தியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராஜேஷின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வேலூர் : அடுத்த ஆற்காட்டான்குடிசையில் ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம்!!
8/29/2024
0