கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (PVTG) அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடியினர் இருளர் இன மக்களுக்கு குடும்ப அட்டை சாதிசான்று, ஆதார்கார்டு, PMJANDHAN வங்கி கணக்கு துவங்குதல் Sickle Cell நோய் கண்டறிவும் முகாம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் அம்மக்கள் வசிக்கும் பகுதிகளில் PMJANMAN திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம் 30.08.2024 முதல் 13.09.2024 வரை நடைபெறுகிறது.
இம்முகாம் ஒப்பதவாடி (30.08.2024), காரகுப்பம் (30.08.2024), சாப்பர்தி (03.09.2024), அரசம்பட்டி (03.09.2024), ஆலப்பட்டி (04.09.2024), மத்தூர் (05.09.2024), உத்தனப்பள்ளி (06.09.2024), சிங்காரபேட்டை (10.09.2024), வேப்பனப்பள்ளி (11.09.2024), தளி (12.09.2024), அனுமந்தபுரம் (13.09.2024) மற்றும் அஞ்செட்டி (14.09.2024) ஆகிய தேதிகளில் சம்மந்தப்பட்ட கிராம பஞ்சாத்து அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமை பழங்குடியின மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.