இந்தியா பால் சங்கத்தின் தலைவர் டாக்டர். ருபிந்தர் சிங் சோடி, எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் இணை நிறுவனர் ஸ்ரீஷா மோகன்தாஸ், மற்றும் மாணவ மாணவியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் இன்று ட்ரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2024 எனும் கருத்தரங்கின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.
9/02/2024
0
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்எஸ்விஎம் வேர்ல்ட்ஸ்கூலில்டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2024”எனும் தலைப்பின் கருத்தரங்கத்தின் 3வது பதிப்பின் முதல் நாள் துவக்கவிழா இன்று நடைபெற்றது. இன்று முதல் வரும், 3ம் தேதி வரை நடைபெறும் இந்த மூன்று நாள் நிகழ்வில், இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கவனம் செலுத்தி உள்ளது. இந்த ஆண்டின் கருத்தரங்க மாநாடானது , "எதிர்வரும் இன்றைய நாளில், நிலையான நாளை" என்ற கருப்பொருளில், நடைபெற்றது. இதில் இந்தியாவின் தொலைநோக்கு பார்வை கொண்ட சில தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் புதுமையாளர்கள் கலந்து கொண்டனர், மேலும் பல்வேறு துறைகளில் உள்ள மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சிந்தனைத் தலைவர்களிடையே கருத்துப் பரிமாற்றம், புதுமை மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான துடிப்பான தளமாக இந்த கருத்தரங்கம் அமைந்தது. இன்றைய துவக்கவிழா நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக முன்னாள் இந்திய விமான படையின் ஓய்வு பெற்ற விங் கமாண்டர் ராகேஷ் சர்மா கலந்து கொண்டு இந்த கான்க்ளேவை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் இப்புவியின் பிரபஞ்சத்தை வழிநடத்துதல் மற்றும் ஒரு தேசத்தின் எதிர்காலத்தை ஊக்குவித்தல்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்எஸ்விஎம் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன்,