கோவை:இந்தியா கூட்டணி என்பது இந்து மகா சமுத்திரம் போன்றது சில சில அலைகள் அடிக்கத்தான் செய்யும் கடைசியில் ஓய்ந்துவிடும் - திருமாவளவன் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை பதில்

sen reporter
0

ஒன்றிய ,அமைச்சர் நடந்து கொண்ட விதம் ஒரு சிறு குரு நடுத்தர தொழில் செய்பவர்கள் குறிப்பாக ஒரு ஓட்டல் உரிமையாளர் தன்னுடைய கோரிக்கையை முன் வைத்ததற்காக தன்னுடைய அறையில் அழைக்க அவரை மன்னிப்பு கேட்க வைப்பதும் அவர் நடத்திய விதமும் எல்லோரையும் கலங்கடிக்க செய்துள்ளது அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எதிர்க்கட்சிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மனிதர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல் இப்படி செய்திருப்பது எல்லோரையும் வருத்தத்திற்குரியது ஆகியுள்ளது இதை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கின்றது அவர் என்ன பாதகம் செய்தார் என்ன தவறாக கேள்வி கேட்டார் ஜிஎஸ்டி கூட்டத்தில் என்ன நிறைகுறை இருக்கின்றன அதை தீர்ப்பதற்கான கூட்டம் என்று அவர்களே சொல்லியிருந்தார்கள் மேலும் மூன்று அடுக்கு அதிகாரிகளை வைத்து கருத்து கேட்கவும் கூறி இருந்தார்கள் குறைகள் இருந்தால் கேட்டு அறியலாம் என்று அவர்கள் மத்தியிலேயே சொல்லி இருக்கிறார்கள் அந்த கூட்டத்தில் தான் அவருடைய குறைகளை அவர் சொல்லி இருக்கிறார் இதில் என்ன பாதகம் இருக்கிறது

கோவை மாவட்டம் என்றாலே சிறிய குழந்தைகள் கூட வாங்க போங்க என்று அழைக்கின்ற பண்புள்ள மண் இந்த மண் எல்லோருக்கும் மரியாதையை சொல்லிக் கொடுக்கின்ற இந்த கோவை மண்ணுக்கு கோவை மண்ணிலேயே இப்படிப்பட்ட அநாகரிக செயல் நடந்திருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் இது அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் என்பதற்காக அல்ல யாரையும் எப்படி ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகார தோரணையில் விரட்டுவதும் மிரட்டுவதும் மன்னிப்பு கேட்க வைப்பதும் அதை கேட்டதை பொதுவெளியில் வெளியிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது 

குறிப்பாக நம்முடைய தாய்மார்களுக்கும் பெண்களுக்கும் மரியாதை கொடுப்பவர்கள் பெண்களை தாயாக பார்ப்பவர்கள் தான் நம்ம வீட்டு தாய் ஒரு ஆம்பளையை இப்படி உட்கார வைத்து குறிப்பாக அவரால் சாய்ந்து கூட உட்கார முடியாத அளவிற்கு முனி நாட்களில் அவர் உட்கார்த்துக் கொண்டிருக்கின்றார் எழுந்து எழுந்து நிற்கிறார் அவமானப்படுத்துவது அசிங்கப்படுத்துவதையும் நம்ம வீட்டுப் பெண்கள் பண்ணுவார்களா நம்முடைய சகோதரிகள் பண்ணுவார்களா? ஒரு ஆம்பளையை வரவழைத்து இப்படி மன்னிப்பு கேட்க வைத்து படம் எடுத்து வெளியிடுவார்களா? யோசித்துப் பார்க்க வேண்டும் 

இதுவே அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கேட்டால் தவறு இதே நித்தின் கடற்கரை அவர் ஒரு கேபினெட்டில் இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் அவர் நிதி அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் அதில் எவ்வளவு கிண்டல் இருக்கிறது எவ்வளவு கேளி இருக்கிறது எவ்வளவு கண்டன குரல்கள் இருக்கின்றன அவர் என்ன எழுதினார் குறிப்பாக உயிர் காக்கும் பொருட்களுக்கு மருத்துவமனையில் உள் நோயாளியாக அரிசி ஏவில் உள்ள நோயாளிகளுக்கு உபயோகப்படுத்தும் மருந்துகளுக்கும் உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கிறீர்களே இதை உடனே அகற்றுங்கள் என்று கடிதம் எழுதுகிறார் அவரிடம் இதுபோல கோவை சட்டமன்ற உறுப்பினரும் நிதியமைச்சர் ஒரு ஹோட்டல் அறையில் உட்கார வைத்து கூனிக்குறுகி அவரால் சாய்ந்து ஓட உட்கார முடியாமல் நுனிநாள் காலையில் உட்கார்ந்து கொண்டு என்னை மன்னித்து விடுங்கள் என்று அவர் மன்னிப்பு கேட்பாரா அவரை கேட்க வைக்க முடியுமா அதைக் கேட்ட பிறகு வீடியோ எடுத்து பொதுவெளியில் வெளியிட முடியுமா நிதின் தக்காளிக்கு ஒரு நியாயம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசனுக்கு ஒரு நியாயமா எனவே வானதி சீனிவாசன் நிதின் கட்கர் இடம் என்ன கடிதம் எழுதினார் என்று முதலில் கேளுங்கள் நிதின் கட்கரி விமர்சனம் செய்ததை விட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விமர்சனம் செய்தாரா அவர் குறைகளை கேட்டார் ஆனால் அவர் விமர்சனம் செய்துள்ளார் எனக்கூறி அன்னபூர்ணா உரிமையாளர் கேட்டதற்கு நிதின் கட்கரி கேட்டதற்கும் வித்தியாசம் உள்ளது சீனிவாசன் பண்பாக கேட்டுள்ளார் மிகவும் நாகரிகமாக கேட்டுள்ளார் குறிப்பாக இதுபோன்ற மன்னிப்பு கேட்க வைப்பதெல்லாம் திரைப்படத்தில்தான் வரும் வில்லன்கள் மன்னிப்பு கேட்க வைப்பதை படம் எடுத்து அதை ஆவணமாக வைத்து வெளியிடுவார்கள் ராகுல் காந்தி அங்குஉள்ளபத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் மாணவர்களின் கேள்விகளுக்கும் தான் பதில் சொல்லியுள்ளார் இது அமெரிக்காவுக்கும் பொருந்தும் எங்கள் தேசத்தில் இப்படி சீனா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது உங்கள் நாட்டில் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் விட்டு விடுவீர்களா என்று கேட்டிருக்கிறார் இதில் என்ன இருக்கிறது 

அண்ணாமலை மன்னிப்பு கேட்க கூடாது அங்கு இருந்த இரண்டு அம்மையார் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் அவர்தான் இந்த தேசத்திலேயே இல்லையே நாடு விட்டு நாடு கடந்து சென்றுள்ளார் அவர் மன்னிப்பு கேட்டு என்ன பிரயோஜனம் 

திருமாவளவன் பேசியிருப்பது அது அவருடைய கட்சி விவகாரம் அது அவருடைய கருத்து அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் எங்களைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கின்றது இன்னமும் வலிமை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது இது இந்தியா கூட்டணி என்பது ஒரு மிகப்பெரிய மகா சமுத்திரம் அந்த சமுத்திரத்தில் சில சில அலைகள் அடிக்கத்தான் செய்யும் கடைசியில் அலைகள் ஓய்ந்துவிடும் அது அவருடைய கட்சி அவருடைய கருத்திற்கு அவருக்கு உரிமை இருக்கிறது அதனை அவர் பேசியிருக்கிறார் காங்கிரசைப் பொருத்தவரைக்கும் திமுகவும் காங்கிரசும் ஒற்றுமையாக தான் இருக்கிறது அலை ஒழிந்து விடும் என்று கிடையாது வேகமாக அலை அடிக்கும் போது அதன் பிறகு அலைகள் அமைதியாக ஆகிவிடும் அதன் பிறகு கருத்துக்கள் சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது திருமாவளவன் அவர் கருத்தை அவர் சொல்லுகிறார் திராவிட முன்னேற்ற கழகம் காங்கிரஸ் பேரியக்கம் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் மார்க் லிஸ்ட் ஐ ஓ எம் எல் மனிதனாய் மக்கள் கட்சி என எல்லாரும் நாங்கள் ஒற்றுமையாக வலிமையோடு இருக்கிறோம் இந்தியா கூட்டணி யாரும் அசைக்க முடியாது இது எங்களுடைய இயக்கு கோட்டை போன்ற கூட்டணி 100 சதவீதம் இந்த கூட்டணி தொடரும் வலிமையான கூட்டணியாக உள்ளதுமுதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்று அதிக முதலீடுகளை கிட்டத்தட்ட 8000 கோடி ரூபாய்க்கு அளவில் ஆன முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார் இதனை நாங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளோம் இந்தியா முன்னோடி மாநிலமாக செயலாளர் நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கின்றது இதனை நாங்கள் வரவேற்கிறோம் எங்களை பொறுத்த வரைக்கும் இரு மொழிக் கொள்கைதான் மும்மொழிக் கொள்கை என்பது கிடையாது என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top