கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, சர்வதேச காதுகேளாதோர் தினம், இந்திய சைகை மொழி தினம் கொண்டாடுவதையொட்டி, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
சர்வதேச காதுகேளாதோர் தினம் 23.09.2024 முதல் 29.09.2024 வரை இந்திய சைகை மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (25.09.2024) இந்திய சைகை மொழி தினத்தை கொண்டாடும் விதமாக காதுகேளாத 75 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், இம்மாவட்டத்தில் நாளதுவரை 5,620 காதுகேளாதோர் மற்றும் வாய்போச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023-2024 வருடம் 152 கல்வி பயிலும் காதுகேளதா மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9,02,000/- கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் காதுகேளாதோர் மற்றும் வாய்போச இயலாதவர்களுக்கு பயிற்சி மற்றும் பணிபுரிபவர்களுக்கு 400 திறன் பேசிகள் மற்றும் இலவச பயண சலுகை அட்டை வழங்கப்பட்டுள்ளது.மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாதாந்திர உதவித்தொகை ரூ.1500/- வழங்கப்பட்டு வருகிறது. திருமண உதவிதொகையாக 12 -வது வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.25,000 மற்றும் பட்ட படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 தாலிக்கு தங்கம் 8 கிராம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், செவிதிறன் பாதிக்கப்பட்ட இளம்சிறார்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மையம் கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வருகிறது. சுயதொழில் செய்ய வங்கி கடன் மான்யம் ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
இப்பேரணியில்மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.முருகேசன் காதுகேளாதவர்களுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.