கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மி ஆட்டத்தில் தமிழ் மண் மனம் விருது பெற்ற பவளக்கொடி கும்மியாட்ட அறக்கட்டளை குழுவினரின் 151,152,153 வது பிரம்மாண்ட முப்பெரும் அரங்கேற்ற நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு நடனக் குழுவினருடன் இணைந்து நடனமாடிதுவக்கிவைத்தார்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டம், தென்னமநல்லூர் கிராமம், அருள்மிகு ஸ்ரீ கரிய காளியம்மன் திருக்கோவில் திருமண மண்டப மைதானத்தில், தென்கயிலை ஈசன் கலை பண்பாட்டு மையம் சார்பாக, தமிழ் மண் மனம் விருது பெற்ற பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் 151, 152 மற்றும் 153 - வது முப்பெரும் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமைநிலையசெயலாளருமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நடனமாடி அரங்கேற்றத்தை துவக்கிவைத்தார். இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டு பாரம்பரிய நடனம் ஆடியது பலரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் கலைஞர்கள் அனைவரையும் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி வெகுவாக பாராட்டி ஊக்குவித்தார்.