கன்னியாகுமரி, மாவட்ட ரப்பர் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் எஸ். எபனேசர் குமரி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு.
9/20/2024
0
தனியார் காடு வளர்ப்பு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் எஸ். எபனேசர் குமரி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எனது கோரிக்கை மனு எண் (8059001). தனியார் காடு வளர்க்கும் சட்டத்தை திருத்தம் செய்ய மனு செய்யவில்லை. மாறாக ரப்பர் மரங்களுக்கு தனியார் காடு வளர்க்கும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கவே இந்த மனுவை நான் சமர்ப்பிக்கிறேன். அதாவது 1949 மற்றும் 1979ல் இயற்றப்பட்ட சட்டத்தில் ரப்பர் மரம் முறிந்து விட்டு மறு நடவு செய்ய எந்தவித வழிகாட்டுதலும் இல்லை. ஆனால் வனத்துறையின் வலைதளத்தில் ரப்பர் மரம் முறிந்து மறு நடவு செய்யலாம் என்று இருக்கிறது. 20 12க்கு பிறகு தான் வனத்துறையினரின் அனுமதி பெற்று விவசாயிகள் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்ட வேண்டும் என்று தவறான புரிதலோடு நடந்து கொள்கிறார்கள். அதற்கான நகல் இதனுடன் இணைத்துள்ளேன். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் ரப்பர் விவசாயிகளின் நலன் கருதி ரப்பர் பயிரிடும் இடத்தில் ஆய்வு செய்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரப்பர் மரத்திற்கு வனத்துறையால் அறிவிக்கப்பட்டு அரசால் அறிவிக்கப்படாத சட்டத்திலிருந்து ரப்பர் விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் எபனேசர் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கை மனு அளித்த போது அவருடன் செயலாளர் ராகீம் ராஜா சிங்,பொருளாளர் கேட்சன் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அவருடன் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
