அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதியை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி ராஜாஜி நகர், அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி - 1 -ல் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கு 4 விடுதிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 22 விடுதிகள் என மொத்தம் 26 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இவ்விடுதிகளில் 1536 மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு 4 செட் சீருடைகள், பாய், போர்வை, ஜமக்காளம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும், விடுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு காலை உணவாக சேமியா கிச்சடி, தக்காளி சட்டினி, சாம்பார், பூரி மசால், இட்லி, சாம்பார், சட்டினி, பொங்கல், வரகு பொங்கல், திணை அரிசி பொங்கல், கத்திரிக்காய் கொத்து, வடை, ரவை கிச்சடி, தேங்காய் சட்னி, தோசை (அ) நவதாணிய தோசை ஆகியவை வழங்கப்படுகிறது.
மதிய உணவாக சாதம், சாம்பார், இருவகை பொரியல், ரசம், மோர், முட்டை, காய்கறி பிரியாணி, காய்கறி குருமா, மட்டன்/சிக்கன் குருமா (அ) குழம்பு, கூட்டு, தக்காளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், உருளை கிழங்கு பொரியல், காரக்குழம்பு, புதினா சாதம், கேரட் சாதம், கறிவேப்பிலை சாதம் ஆகியவை வழங்கப்படுகிறது.
மாலை நேரங்களில் சுண்டல்/சுக்குமல்லி காபி வழங்கப்படுகிறது. இரவு உணவாக
சப்பாத்தி, குருமா, காய்கறி புலாவ், குருமா / ரைத்தா, ஊத்தாப்பம், கோதுமை தோசை, சாம்பார் சாதம், தக்காளி சாதம் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், ஒரு மாணவருக்கு ஒரு மாதத்திற்கு 20 முட்டைகள், மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வாரம் 80 கிராமுடன் ஆட்டிறைச்சி, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வாரம் 100 கிராமூடன் கோழி இறைச்சி வழங்கப்படுகிறது.இன்று கிருஷ்ணகிரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி மாணவியர் விடுதியில் 60 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இவ்விடுதியில் மாணவியர்களின் சேர்க்கை பதிவேடு, இருப்பு பதிவேடு, வருகைப்பதிவேடு, காப்பாளர் நகர்வு பதிவேடு, மாணவர் நகர்வு பதிவேடு மேலும் இந்த ஆண்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவேடுகளையும், மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடுதி அறைகள், மின்சார வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகள், சமையலறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நாள்தோறும் விடுதி மாணவிகளுக்கு வழங்கப்படும் வாராந்திர உணவு பட்டியல் குறித்த விபரங்கள், மாணவியர்களின் எண்ணிக்கை விபரம், மாணவிகளுக்கு காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் வழங்கப்படும் உணவுகளின் விபரங்கள் குறித்து விடுதி காப்பளரிடம் கேட்டறிந்து, உணவுகளை தரமாகவும், சுவையாகவும் மாணவிகளுக்கு வழங்க அறிவுத்தப்பட்டது.
தொடர்ந்து, இன்று மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு உணவுகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மாணவிகளின் கற்றல் கற்பித்தல் திறன் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்து அவர்களை நல்ல முறையில் கல்வி பயில அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாணவியர்களின் மாலை நேர வகுப்பு மற்றும் அவர்களின் பாடத்திட்டங்கள் குறித்து விடுதி காப்பாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி.மணிமேகலை நாகராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரமேஷ்குமார், கிருஷ்ணகிரி நகரமன்ற துணைத்தலைவர் திருமதி.சாவித்திரி கடலரசுமூர்த்தி, கிருஷ்ணகிரி வட்டாட்சியர் திருமதி.பொன்னாலா மற்றும் விடுதி காப்பாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

