மாவட்ட அளவிலான எச்.ஐ.வி./எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பற்றிய தீவிர பிரச்சாரமானது (12.08.2024 முதல் 12.10.2024 வரை) நடைபெறும் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்பணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. மேலும், அறிஞர் அண்ணா மற்றும் குன்சாக கல்லூரி மாணவ/மாணவிகள் கலந்து கொண்ட மனித சங்கிலி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி அண்ணாசிலை வரை நடைபெற்றது.
தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் ஆட்டோ ரிக்ஷாவில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், கிராமிய கலைக்குழு மூலம் (Folk media Campaign) எச்.ஐ.வி./எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரி மாணவ/மாணவியர்களைக் கொண்டு Flash Mobs நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 250 நபர்கள் கலந்துக்கொண்டார்கள
இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட மேலாளர் திரு.அருள், அரசு மருத்துக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் மரு.மது, கூட்டு மருந்து சிகிச்சை மருத்துவர் மரு.ஜகன், அரசு மருத்துவமனை மருத்துவர் மரு.சண்முகவேல், இரத்த வங்கி மருத்துவர் மரு.வசந்தகுமார், நம்பிக்கை மையம், சுகவாழ்வு மைய பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு, பாஸ்டிவ் நெட்வொர்க் அமைப்பு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

