வேலூர் தீயணைப்பு துறை சார்பில் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி!
9/20/2024
0
வேலூர்மாவட்டம்,சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பில் படகு, பாதுகாப்பு கவசம் உறை, கயிறு, மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் கான்கிரீட் உடைப்பு கருவிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் மூலம் பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து நடைபெற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர்மாலதிபார்வையிட்டார் இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்தையன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லட்சுமி நாராயணன், கூடுதல் தீயணைப்புத்துறை அலுவலர் எஸ்.பழனி, உதவி தீயணைப்புத் துறை அலுவலர்கள் அரசு, முருகேசன், பார்த்திபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் என பலர் உடனிருந்தனர்.
