கோவை வடவள்ளி அடுத்த பி என் புதூர் பகுதியில் பிரபல திரையரங்கு நிறுவனமான பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்தின் நவீன 5 திரையரங்குகள் உடன் கூடிய ஆல்வில் எனும் புதிய வர்த்தக வளாகம் துவஙகப்படுள்ளது.
கோவை மாநகரில் ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் திரையரங்குகளுடன் கூடிய வர்த்தக வளாகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் கோவை மருதமலை சாலை வடவள்ளி அடுத்த பி.என் புதூர் பகுதியில் புதிய வர்த்தக வளாகம் துவங்கப்பட்டுள்ளது.ஆல்வில் என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்தின் நவீன ஒலி ஒளி மற்றும் ஹைட்ராலிக் இருக்கைகள் உடனான ஐந்து திரையரங்குகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆறு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வர்த்தக வளாகத்தில் விற்பனை பொருட்கள் அதிக அளவில் இடம் பெறாமல் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்நிறுவன உரிமையாளர்கள், கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே தற்போது இந்த வர்த்தக வளாகம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் திரையரங்கம் ஒன்று இருந்ததாகவும் அப்போதே 600 இருக்கைகளுடன் அந்த திரையரங்கம் அமைய பெற்றிருந்த நிலையில் தற்போது 900 பேர் அமர்ந்து திரைப்படம் பார்க்கும் வகையிலான 5 திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உரிய பாதுகாப்பு வசதிகளுடன் எந்த வகையிலும் போக்குவரத்து பாதிக்காத வகையிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த வர்த்தக வளாகத்தில்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பொழுது போக்கும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாகவும் குறிப்பாக கிராமிய விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் மற்ற வணிக வர்த்தக வளாகங்களை ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்களை வழங்குவதாகவும் கூறினர்.இதேபோல் 25 ரூபாய் முதல் கட்டணம் செலுத்தி சிறுவர் சிறுமியர் விளையாட்டுகளை விளையாடலாம் எனவும் அதே போல் திரையரங்குகளிலும் 49 ரூபாய் முதல் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறியதுடன், பல்வேறு வகை உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வகையிலும் இயந்திரங்கள் இல்லாமல் சமைத்த உணவுகள் பரிமாறும் வகையிலும் உணவகங்கள் துவங்கப்பட இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.