கிருஷ்ணகிரி:அத்திப்பாடி ஊராட்சியில் பொதுமக்களே இல்லாத கிராம சபை கூட்டம்!!!
10/02/2024
0
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் அத்திப்பாடி ஊராட்சியில் கிராம சபைகூட்டம்நடைப்பெற்று.இதில் 20க்கு குறைவான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் கணக்கு எதுவும் மக்களின் மத்தியில் காட்டவில்லை கணக்கு காட்டுமாறு கேட்ட பொதுமக்களிடம் காட்டமுடியாது என்று ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குமார் மிரட்டும் தோரணையில் பதில் அளித்தார். கிராம சபை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வட்டார ஒன்றிய மேற்பார்வையாளர் கலந்து கொண்டார் அவரிடம் பொதுமக்கள் அவர்களின் குறைகளை கூறும்போது அவர்களிடம் கிராம சபை கூட்டம் முடிந்தது அறையில் இருந்து அனைவரும் வெளியே செல்லுங்கள் என்று ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வெளியேற்றினார்.இதற்கு காரணம் அரசு வழங்கும் இலவச வீட்டிற்கு பணிதள பொருப்பாளர் மூலம் 20000 முதல் 30000வரை வசூல் செய்தனர் அதன் சம்பந்தமாக இளைஞர்கள் கிராம சபை கூட்டத்தில் கேட்பதற்கு இருந்தாகவும் அதற்காக விரைந்து கண் துடைப்பு கிராம சபை நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .பொதுமக்களுக்கு முறையான அழைப்பு இல்லை, விளம்பரம் செய்யவில்லை என்றும் முறையாக அழைப்பு விடுத்து சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்