வேலூர்: கரிகிரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்!
10/02/2024
0
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் கரி கிரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன் தலைமையில் நடந்தது. கரிகிரி ஊராட்சிக்கு உட்பட்ட சக்கராக்குட்டை கிராமத்தில் உள்ள கோயில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திரளாக பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கிராமத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் ஜல் அபியான் திட்டம் கிராமம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.