வேலூர்:காட்பாடி 1வது வார்டு அன்பு தலைமையில் மாஹாளய அமாவாசையை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்!!!
10/02/2024
0
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கல்புதூர் பகுதியைச் சேர்ந்த வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரும், ஏ. கே. பில்டர்ஸ் உரிமையாளருமான அன்பு, ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தன்று தொடர்ச்சியாக ஏழை, எளியவர்களுக்கு அன்னதானமாக மதிய உணவு வழங்கி வருகின்றார். இந்நிலையில் புரட்டாசி மாத மாஹாளய அமாவாசையை முன்னிட்டு 1வது வார்டு மாமன்ற உறுப்பினரும், ஏ.கே.பில்டர்ஸ் உரிமையாளருமான அன்பு தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஓய்வுபெற்ற ஆசிரியர் சச்சிதானந்தம், ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு அன்னதான விழாவை சிறப்பித்து பொதுமக்களுக்கு அன்னதானம் விநியோகம் செய்தனர்.