வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா, லத்தேரி பேருந்து நிலையத்தில், கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரியானாவில் பா.ஜ.க. மகத்தான வெற்றியும் மற்றும் ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக அதிக அளவில் பெரும்பான்மையை பிடித்து பா.ஜ.கவெற்றியடைந்து வெற்றி விழா, முன்னாள் சி.ஆர்.பி.எப் வீரரும், கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றிய தலைவருமான பி.ஜெயபிரகாஷ் தலைமையில், கட்சி நிர்வாகிகளுடன் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச் செயலாளர் திருஞானம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேவராஜ், சி.எஸ்.சேகர், ஒன்றிய துணைத் தலைவர் பாலாஜி, நவகோட்டி, சரவணன், ஏ.டி.ஆறுமுகம், இராமச்சந்திரன், அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி வெற்றி விழாவை சிறப்பித்தனர்.
வேலூர்:கே.வி.குப்பம் பா.ஜ.க சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி விழா கொண்டாட்டம்!!
10/09/2024
0