தேனி மாவட்டம் உத்தமபாளையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தேவாரத்தில் ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவுதினம் அனுசரிப்பு!!!
12/05/2024
0
புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாளை நாடு முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் அனுசரித்து வரும் நிலையில் உத்தமபாளையம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவாரம் பேரூராட்சியில் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வானது உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் EMPP. கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் தேவாரம்(கிழக்கு)பேரூர் கழக செயலாளர் K.G. கணேசன், கம்பம் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் கெப்புராஜ், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் V. தணபாக்கியம், உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் சிவசூரியன், இவர்களுடன் பிரதிநிதிகளான M.P. திருமலைராஜ், சோலைமுருகன், தேவாரம் கூட்டுறவு சங்க தலைவர் முத்துபச்சை, தேவாரம் பேரூர் செயலாளர் P.மகிமைராஜ், மேலமைப்பு பிரதிநிதி ராஜேஸ்வரன், மற்றும் ஒன்றிய, பேரூர் ஊராட்சி கிளை கழக, உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
