கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பிறந்ததினத்தை முன்னிட்டு தங்கத்தேர் பவனி மற்றும் கோவில்களில் அன்னதானம்.பேரூர்க்கழக செயலாளர் ஜெயராமன் ஊராட்சி மேனாள் தலைவர் தென்னரசு, அறங்காவலர் கண்ணப்பன், மேப்பல் அழகப்பன், கோதண்டபாணி பங்கேற்பு.சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிவகங்கை மாவட்ட திமுகவினர் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.அந்த வகையில் கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பேரூர்க்கழக செயலாளர் ஜெயராமன், அறங்காவலர் கண்டிப்பட்டி வி.சி.கண்ணப்பன் , மாவட்ட பிரதிநிதிகள் தென்னரசு, மேப்பல் அழகப்பன் , துணைச்செயலாளர் கோதண்டபாணி ஆகியோர் தங்க த்தேரை இழுத்து மாண்புமிகு அமைச்சர் நீண்ட காலம் நோயற்ற வாழ்வு வாழவேண்டும் என வேண்டிக்கொண்டனர்...
இதனிடையேகாளையார் கோவில் ஒன்றிய மாவட்ட பிரதிநிதியும் ஊராட்சி மேனாள் தலைவருமான பி. சி. தென்னரசு அவர்களின் ஏற்பாட்டில் நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ள கண்ணுடைய நாயகியம்மன் கோவிலில் மாண்புமிகு அமைச்சர் பெயரில் சிறப்பு அர்ச்சனை அபிஷேக ஆராதனைகள் செய்து அங்குள்ள பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது...
இதேபோல் ஒன்றியக்கழக துணைச்செயலாளர் கோதண்டபாணி அவர்களின் ஏற்பாட்டில் கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து அறுசுவை அன்னதானமும் வழங்கினர்...இந்த நிகழ்ச்சியில் பேரூர்கக்கழக செயலாளர் ஜெயராமன், அறங்காவலர் கண்டிப்பட்டி வி.சி.கண்ணப்பன், மாவட்ட திமுக பிரதிநிதிகள் தென்னரசு, மேப்பல் அழகப்பன், ஒன்றிய துணைச்செயலாளர் கோதண்டபாணி, வழக்கறிஞர் திருப்பதி, இளைஞரணி முத்தரசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்...
