திண்டுக்கல் சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!!
12/14/2024
0
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுச்சத்திரம் அருகே ஒட்டன்சத்திரம் இணைப்புச் சாலையில் இருந்து மெட்டூர் செல்லும் தார் சாலையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட இருசக்கர நான்கு சக்கர வாகனங்களும் பள்ளி கல்லூரி வாகனங்களும் தினந்தோறும் செல்கின்றன. திண்டுக்கல் பழனி சாலை போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாக இருப்பதால் மதுரையில் இருந்து கோயம்புத்தூர் பழனி திருப்பூர் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வாகன ஓட்டிகள் பொதுமக்களும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர் இந்தச் சாலை கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக தான் புதிதாக பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் இச்சாலை மிகவும் சேதமடைந்து பல்லாங்குழிகளால் காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களிலும் இப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து இப்பகுதிகளில் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
