திண்டுக்கல் சாலைவிபத்தில் உயிரிழந்த வனக்காப்பாளருக்கு நிதி உதவி வழங்கல்!!!

sen reporter
0

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரக  வனக்காப்பாளர் ராமசாமி  (32)  செம்பட்டி அருகே உள்ள  கூலாம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் மரணம் அடைந்தார்.தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் மூலம் (7,00,000) ரூபாய் ஏழு லட்சத்தை மரணம் அடைந்த  இராமசாமியின் இரண்டு குழந்தைகள் பெயரில் வைப்பு நிதியாக அஞ்சலகத்தில் செலுத்தப்பட்டது. 

ஆவணங்களை தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில தலைவர் கார்த்திகேயன், திண்டுக்கல் மாவட்டதலைவர் ஆறுமுகம், கொடைக்கானல் தலைவர் சுரேஷ்குமார் வழங்கினர்.நிகழ்வில் மாநில பொருளாளர் கார்த்தி,  செயலாளர் புகழ் கண்ணன், பொருளாளர் சாமியப்பன், துணை தலைவர் திலகராஜ், இணை செயலாளர் சபரிநாதன்,  செயலாளர் சங்கர், திருச்சி மாவட்ட செயலாளர் அன்பரசு, வத்தலகுண்டு வனச்சரக அலுவலர் ராம்குமார் மற்றும் திண்டுக்கல், கரூர், கொடைக்கானல் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top