வேலூர் கொணவட்டம் மதினா நகரைச் சேர்ந்தவர் முகமது ஷாநவாஸ் (35 ). இவர் வேலூர் அடுத்துள்ள அரியூர் பகுதியில் இயங்கும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது இவர் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த மாணவியிடம் செல்போனில் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படியும், வீடியோ காலில் நிர்வாண நிலையில் வரும்படியும் கட்டாயப்படுத்தி அவரை தொல்லை செய்து வந்துள்ளார். அவ்வாறு செய்யாவிட்டால் தேர்வில் சரியாக மதிப்பெண் வழங்க மாட்டேன் என்றும் தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார் ஆசிரியர். இதனால் பயந்து போன அந்த மாணவி தனது புகைப்படங்களையும், தனது உடலை காண்பிக்கும் வகையில் வீடியோக்களிலும் அந்த காமுக ஆசிரியரிடம் பேசியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஆசிரியர் பள்ளியில் வைத்து மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லையும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முகமது ஷாநவாஸ் மாணவியிடம் படிக்கும்போது வீடியோ கால் செய்ய வேண்டும் என்றும், பெற்றோர் வீட்டில் இல்லாத போது தனக்கு தெரிவிக்க படியும் கூறியுள்ளார். இவ்வாறு செய்யாவிட்டால் தேர்வில் மதிப்பெண் வழங்க மாட்டேன் என்றும் மீண்டும் மிரட்டி உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வாழ்க்கையில் விரக்தியடைந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட முயன்றுள்ளார். இதனை கவனித்த அந்த பெண்ணின் பெற்றோர் மாணவியிடம் நடந்தது என்ன? தங்களுக்கு விவரமாக கூறும் படி கேட்டுள்ளனர். அப்போது தனது கணித ஆசிரியரால் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து விவரித்த படி விரிவாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வேலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தமிழரசி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முகமது ஷாநவாஸை கைது செய்தார். பள்ளியில் பயிலும் ஒரு மாணவியை ஒரு ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மட்டுமல்லாது வேலூர் மாவட்டம் முழுவதும் ஒரு பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் 10ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது!!!!
1/18/2025
0
வேலூர் அரியூர் பகுதியில் உள்ள மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
