வேலூர்: இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருகிறேன் திமுக கவுன்சிலர் அன்பு பேச்சு!

sen reporter
0


 என்னை  நாடிவரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருகிறேன். அத்துடன் அரசு வேலைவாய்ப்பையும் குறிப்பாக ரேஷன் கடைகளில் பெற்றுத் தருகிறேன் என்று பொங்கல் விழா பரிசு போட்டி வழங்கும் விழாவில் வேலூர் மாநகராட்சி 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு பேசினார்.வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 1வது மண்டலம், காட்பாடி 1வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் தெரு இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் இணைந்து 26 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவை கோலாகலமாக நடத்தினர். இதில் பாரதியார் தெருவில் செங்குட்டை பகுதியில் கடந்த 14 ,15, 16 ஆகிய மூன்று நாட்கள் பல்வேறு போட்டிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இந்த பரிசளிப்பு விழாவில் வேலூர் மாநகராட்சி 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் திமுக 1வது வட்ட செயலாளர் கே. அன்பு கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், இளைஞர்கள் ஆகியோருக்கு பரிசுகளை வாரி வழங்கி விட்டு அவர் சிறப்புரையாற்றி பேசிய போது கூறியதாவது:  நான் மிகவும் சிரமப்பட்டு முன்னேறியவன். முதலில் நான் வேலைக்கு வரும்போது எனக்கு கூலி வெறும் 50 பைசா மட்டுமே. இன்று நான் கஷ்டப்பட்டு உழைத்து படிப்படியாக முன்னேறியுள்ளேன். கடந்த 2017ல் நகராட்சி கவுன்சிலராக போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் சுயேட்சையாக போட்டியிட்ட போது இந்த பாரதியார் தெரு மக்கள்தான் என்னை ஆதரித்து அரவணைத்து எனக்கு வாக்களித்தனர். அதை நான் என்றும் மறவேன். செய்த உதவியை நான் என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன். உதவி செய்தவர்களையும் அதே போன்று நான் மறவாமல் இன்றுவரை நட்புடன் அவர்களுடன் பழகி வருகிறேன். இந்த பாரதியார் தெருவுக்கு எனது சொந்த செலவில் சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுத்துள்ளேன். இதை நீங்கள் வேண்டுமென்றால் மாநகராட்சிக்கு சென்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள். நான் உங்களை விட்டு விலகி இருக்க மாட்டேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறேன். உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கிறேன். ஒற்றுமையாக அனைவரும் இருந்து பல பணிகளை சாதிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் என்று அவர் பேசினார். அத்துடன் காட்பாடி ராஜீவ் காந்தி நகர் பகுதியில் இதே போன்று பொங்கல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து பேசுகையில், இங்குள்ள இளைஞர்கள் என்னை நாடி வருவதில்லை. அப்படி அவர்கள் வந்தால் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பையும் பெற்றுத் தர நான் தயாராக உள்ளேன். குறிப்பாக ரேஷன் கடைகளில் எடையாளர் பணியை நான் சிபாரிசு செய்து வாங்கித் தருகிறேன். வேலை தேவைப்படுவோர் என்னை சந்தித்து இந்த வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் உயர வேண்டும் என்று அப்போது அவர் தெரிவித்தார். நான் உங்களுக்கு சேவை செய்யவே உள்ளேனே தவிர உங்களிடம் ஓட்டு வாங்கிக் கொண்டு செல்வதற்காக அல்ல. மற்றவார்டுகளைப் பற்றி நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. நான் எனது 1வது வார்டை கோயில் போன்று நினைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறேன். ஆதலால் தொடர்ந்து எனக்கு நீங்கள் உங்கள் ஆதரவையும், அன்பையும் எனக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர்கள் மேலும் வளர்ந்து அவர்கள் வீட்டுக்கு பேருதவியாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top