இந்த பேரணியை நடத்துவதற்கான முக்கிய குறிக்கோள், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் பாதுகாப்பான பின்பற்றுவதற்காகவும் பெருகிவரும் சாலை சாலை நடைமுறைகளை விபத்து இறப்புக்களை குறைப்பதற்காகவும் இப்பேரணி நடத்தப்பட்டது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் பங்கேற்றனர்.
ஜனவரி 10,2025 அன்று எஸ்.என் ஆர் சின்ஸ் அறக்கட்டளை, நிர்வாக அறங்காவலர் திரு.R. சந்தர், காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு சிற்றரசன், ஆகியோர் இணைந்து கோயம்புத்தூர் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் இப்பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் 5 ராஜகோபால் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் S.அழகப்பன், மருத்துவர்கள் டாக்டர் மஞ்சுநாதன் டாக்டர் பார்த்திபன் ஆகியோர் பேரணியில் பங்கேற்றனர்.
இப்பேரணியில் மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் தலைக்கவசம் அணிவது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மற்றும் வேக வரம்புகளை கடைப்பிடிப்பது போன்ற முக்கிய குறிப்புகளை கொண்ட பதாகைகளை எம்கிச் சென்று விழிப்புணரவ நடத்தினர்.
