அதன்படி கோவை மாநகராட்சியுடன் ஒன்பது ஊராட்சிகள் நான்கு பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி என 14 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட உள்ளது. இதற்கு சில ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சோமையம்பாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது அதனை தொடர்ந்து இன்று கையெழுத்து இயக்க கோப்புகளுடன் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து தங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தங்கள் ஊராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பொழுது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு சார்ந்த பணிகள் பறிபோகும் எனவும் எளிதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சந்திக்க இயலாத சூழல் ஏற்படும் என தெரிவித்தனர்.
மேலும் அங்கு பேருந்து வசதிகள் போன்ற ஒரு சில குறைகள் இருப்பதாகவும் அது ஊராட்சி அலுவலர்கள் முன்னெடுத்தாலே நிறைவேறிவிடும் என தெரிவித்தனர்.
