வேலூர் ஜெயின் கோசாலாவில் கோமாதா பூஜை கோலாகலம்!!!
1/19/2025
0
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நவநீதம்மன் கோயில் தெரு கோட்டை பின்புறம் மேற்கு பகுதியில் பாரதியார் சாலையில் ஜெயின் கோசாலா (மாட்டுப்பண்ணை) அமைந்துள்ளது. இந்த மாட்டுப் பண்ணையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோமாதா பூஜை நடந்தது. ஜெயின் கோசாலா அறக்கட்டளை தலைவர் விமல்சந்த் ஜெயின் தலைமை வகித்தார். செயலாளர் தர்மராஜ், அறங்காவலர் ருக்ஜி ராஜேஷ் முன்னிலை வகித்தனர். இந்த மாட்டுப் பொங்கல் திருவிழாவில் ஜெயின் கோசாலா நிர்வாக குழுவினர்களுடன் அலங்கரிக்கப்பட்ட அனைத்து பசுக்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து கோமாதா பூஜை நடந்தது. சா ம்பிராணி புகை மனத்துடன் கற்பூர ஆரத்தி காண்பித்து மலர்கள் தூவி பழ வகைகள் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதை தொடர்ந்து பசுக்களுக்கு பழங்கள், கரும்புகள், தீவனப் பயிர்கள், அகத்திக்கீரை, பொங்கல் என அனைத்து பசுக்களுக்கும் பல்வேறு விதமான பழ வகைகள் மற்றும் தீவனப் பயிர்களை உணவாக மகிழ்ந்து அளித்து மாட்டுப்பொங்கலை கொண்டாடினர். இந்த பொங்கல் திருவிழாவில் ஜெயின் குழுவின் குடும்பங்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜெயின் கோசாலா குழுவின் சார்பில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
