திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நலன் கருதி சென்னை கொளத்தூர் ரோட்டரு கிளப் சார்பாக பள்ளி உபயோக பொருட்கள் வழங்கல்!!!

sen reporter
0


 திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நலன் கருதி சென்னை கொளத்தூர் ரோட்டரு கிளப் சார்பாக ரூ 1 லட்சம் மதிப்பிலான 50 பிளாஸ்டிக்கிலான  நாற்காலி , காலை வழிபாடு நடத்துவதற்கான ஒலி பெருக்கி பெட்டி , சுமார்ட் அறைகள் மற்றும் செம் அறை ஆகிய அறைகளுக்கு ஒளி பெருக்கி பெட்டிகளை வழங்கி உதவினார்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் குமாரிகுட்டி தலைமை வகித்தார் , உதவி தலைமையாசிரியை ஜாய்ஸ்ராணி முன்னிலை வகித்தார் , தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வரவேற்புரை ஆற்றினார் 

ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை கொளத்தூர் ரோட்டரி கிளப் தலைவரும் பள்ளியின் முன்னாள் மாணவர் சிவக்குமார் , செயலாளர்  சுதா சிவக்குமார் , தொழிலதிபர் சுதர்சன் அந்தோணி , கந்தசாமு ஆகியோர் கூட்டாக தலைமையாசிரியரிடம் வழங்கினார்கள், ரோட்டரி கிளப் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சிவக்குமார் , கார்த்திகேயன், முரளி , வெற்றிச்செல்வி , ராஜேஸ்வரி, சரோஜினி , பழனி, உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top