இந்நிலையில் கோவையில் காங்கிரஸ் கட்சியின் கோவை மாநகர் மனித உரிமை துறையினர் சார்பாக பொங்கல் விழா புலிய குளம் பகுதியில் உள்ள ஆசியாவேலேயே பெரிய முந்தி விநாயகர் கோவிலின் முன்பாக நடைபெற்றது..
மனித உரிமை துறையின் மாவட்ட தலைவர் ஜெரால்டு வின்சென்ட் தலைமையில் நடைபெற்ற இதில் மாநில பொது செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா,பொது செயலாளர் ஜான்சன் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்..விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஐ.என்.டி.யூ.சி.தலைவர் கோவை செல்வன்,முன்னால் மாமன்ற உறுப்பினர் சோபனா சசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்..
முன்னதாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து கோவிலுக்கு வந்தபக்தர்களுக்குகரும்பு பொங்கல்வழங்கப்பட்டது. சகோதரத்துவம்,ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற இந்த விழாவில் கோவை மாநகர் மனித உரிமை துறை நிர்வாகிகள் ஷாநவாஸ், ஆண்டனி பிரிட்டோ,கோட்டை முத்து,சசிக்குமார்,தாஸ்,மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

