இந்நிலையில் கோவை இராமநாதபுரம் பகுதியில் இளைஞர்கள் இணைந்து மாற்றம் கிளப் எனும் சமூக நல்லிணக்க அமைப்பின் மூலமாக பூசாரி மாரியம்மன் கோவில் வீதியில் பொங்கல் விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளைசெய்திருந்தனர். முன்னதாக காலையில் மாற்றம் கிளப் தலைவர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைத்த பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.இதில் அந்த பகுதியில் வசித்து வரும் அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்..
சிறுவர்,சிறுமிகள் மற்றும் சிறு குழந்தைகளுக்காக ஓட்டப்பந்தயம்,மியூசிக்கல் சேர்,ஸ்லோ சைக்கிள்,உரி அடித்தல்,உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.இதில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்,சிறுமிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.தொடர்ந்து இதில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் அப்பாஸ்,வழக்கறிஞர் மனோகரன்,காவல் ஆய்வாளர் சேகர்,பத்திர எழுத்தாளர் ஈஸ்வரன்,மாமன்ற உறுப்பினர் சாந்தி முருகன்,பிரிமியர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

