தி.மு.க வினர் அந்த காலத்தில் இந்திரா காந்தி முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரை பெண்களை அவமதிப்பு தான் செய்கிறார்கள் சட்டசபையில் ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தினார்கள் . இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது திராவிட மன்னிப்புக் கழகமாக மாறி விட்டது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் எத்தனையோ புயல் வெள்ளம் வந்தது. ஆனால் அவர்களை அனைத்திலும் இருந்து பாதுகாத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் தி.மு.க ஆட்சி காலத்தில் என்ன செய்தார்கள். வீரத்தைப் பற்றி தி.மு.க வினர் பேச கூடாது.
கொரோனா காலத்தில் ஆறு மாதம் டாஸ்மாக்கை மூடி வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் தி.மு.க வினரால் ஈஸ்டர் பண்டிகைக்கு கூட டாஸ்மாக்கை மூட முடியவில்லை. முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் தி.மு.க வினரை கண்ட்ரோலாக வைத்து இருக்க முடியவில்லை. அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகிவிட்டது. முதலமைச்சரும் தப்பு தப்பாக பேசுகிறார். அமைச்சர்களும் பெண்களைப் பற்றி தப்பு தப்பாக பேசுகிறார்கள். பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்தாலும் யாராவது பேசினாலும் அதை வெளியில் வரக் கூடாது என்று தான் பார்க்கிறார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று திசை திருப்புகிறார்கள். இந்தியை ஒழிப்போம் என்பவர்கள் சாராயத்தை ஒழிப்போம் என்று கூற வேண்டியது தானே. இவர்கள் அனைவரும் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு இலவச உதவி தொகை கொடுத்து விட்டு நீங்கள் மேக்கப் போடலாம் என்கிறார் ஒரு அமைச்சர். இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிடுவது போல் பொன்முடி பேசி உள்ளார். ஏற்கனவே பெண்களை குறித்து ஓசி டிக்கெட் என்றவர் தான். இவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் மதிப்பதில்லை. இப்போது சைணவம் வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி கேவலமாக பேசி உள்ளார். அதை காமெடி என நினைத்து கை கொட்டி சிரிக்கிறார்கள். அ.தி.மு.க வில் யார் தப்பாக பேசினாலும் அது அமைச்சராக இருந்தாலும் சாதாரண தொண்டராக இருந்தாலும் அவர்கள் கதி என்ன ஆகும் என்பது சாதாரண தொண்டனுக்கும் தெரியும். ஆனால் அமைச்சர் பொன்முடி குறித்து யாரும் தட்டிக் கேட்கவில்லை. ஒரு அமைச்சர் அவருக்கு ஆதரவாக வார்த்தை கிளிப் ஆகிவிட்டது என்கிறார். ஏன் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் அவரை கட்சி பொறுப்பில் இருந்து தூக்கி விட்டோம் என்கிறார்கள். அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி வீசுங்கள். அவர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள். சவுக்கு சங்கர் உள்ளிட்டவர்கள் மீது பாய்ந்து பாய்ந்து நடவடிக்கை எடுக்கிற போலீசார் ஏன் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். போலீசார் வேடிக்கை பார்க்கிறார்கள். இது தான் தி.மு.க வின் ஆட்சி இலட்சணம். தி.மு.க ஆட்சியில் கடவுளுக்கும் மதிப்பு இல்லை. கடவுளுக்கு ஒப்பான பெண்களுக்கும் மதிப்பு இல்லை. இப்போது அ.தி.மு.க கூட்டணி குறித்து தி.மு.க வினர் பயப்படுகிறார்கள். அவர்கள் பயந்து தான் ஆக வேண்டும். மு க ஸ்டாலின் நாங்கள் எந்த ஷா வுக்கும் பயப்பட மாட்டோம் என்கிறார். ஏற்கனவே தி.மு.க ஆட்சியை கலைத்தவர் ஒரு ஷா தான் திமுகவினரை தூக்கி போட வேண்டும். அமைச்சர் பொன்மொழியை சிறையில் தள்ள இவ்வாறு அவர் பேசினார்.