கோவை:பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களை பாதுகாத்திட வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்!!!

sen reporter
0

கோவையில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக Synopsis கட்டணம்  3500 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாகவும் Thesis கட்டணம் 7000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாகவும் Resubmission PhD கட்டணம் 10,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  மேலும் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் அவர்களது ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ரசாயனங்கள் இரண்டு வருடங்களாக கிடைக்கப்பெறாமல் இருப்பதாகவும் ஆராய்ச்சி கருவிகள் செயல்பாட்டில் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள் இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 


மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கில துறை பேராசிரியராக பணியாற்றி வரும் பத்மநாபனின் PhD கல்விச்சான்றிதழ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருவதால் அவர் பெற்ற அசல் சான்றிதழை நிர்வாகத்திடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அதேபோல் அங்கு அடிப்படை வசதிகள் முறையாக இல்லை,  400க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது எனவே அந்த குறைகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். முன்னதாக அவர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முழக்கங்களை எழுப்பினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top